மக்களவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்கு பதிவு ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெற்றது. அதை தொடர்ந்து இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தேர்தல் நடைபெறும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகர், உத்தம்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஸ்ரீநகர் இடைத்தேர்தலில் 7.13 விழுக்காடு வாக்கு மட்டுமே பதிவானது. இந்தத் தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபருக் அப்துல்லா வெற்றிபெற்றார்.
உத்தம்பூர் மக்களவைத் தொகுதியை பொறுத்த வரை 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குலாம் நபி ஆசாத்தை, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தோற்கடித்தார்.