தெலுங்கு தேச கட்சி தலைவரும், ஆந்திர முதலமைச்சருமான சந்திர பாபு நாயுடு பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் பல கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சித்துவருகிறார். உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர்கள் அகிலேஷ் யாதவ், மாயாவதி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சமீபத்தில் டெல்லியில் சந்தித்து தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை பேசியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு, இந்தத் தேர்தலில் தெலுங்கு தேசம் வெற்றி பெறுவதில் எனக்கு 1000 விழுக்காடு நம்பிக்கை உள்ளது. அதில் தனக்கு 0.1 விழுக்காடுகூட சந்தேகம் இல்லை. வாக்கு எண்ணும் முறையில் பல பிரச்னைகள் உள்ளன. தேர்தல் ஆணையம் அதனை தீர்க்க வேண்டும் என்றார்.
மே 23ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்க உள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்து பேசுவது அரசியல் வட்டாரத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளன.