பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலகத்தில் அக்கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.
கர்நாடகாவின் அரசியல் சூழ்நிலை, மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல் குறித்து, கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.