ETV Bharat / elections

காஞ்சியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு: மக்கள் தகுந்த இடைவெளியுடன் வாக்களிப்பு

காஞ்சிபுரம்: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலுள்ள 1,872 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

காஞ்சிபுரத்தில் வாக்குப்பதிவு துங்கியது - வாக்காளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வாக்களிப்பு

author img

By

Published : Apr 6, 2021, 10:13 AM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு தொகுதிகளில் மொத்தம் 75 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதியிலுள்ள ஆயிரத்து 872 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிமுதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

காஞ்சிபுரத்தில் வாக்குப்பதிவு

இதையடுத்து, வாக்காளர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து வாக்களித்துவருகின்றனர்.

மேலும், கரோனா தடுப்பு நடவடிக்கையாக வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு கையுறைகள் வழங்கப்பட்டும், கிருமி நாசினி அளித்தும், வெப்பநிலை பரிசோதனை மேற்கொண்ட பின்னரே வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

இதையும் படிங்க: சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் விவரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.