கோயம்புத்தூர்: வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வடிவமைக்கப்பட்ட மணல் சிற்பம் பொதுமக்களை ஈர்த்துவருகிறது.
கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த யூ.எம்.டி. ராஜா சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி 100 விழுக்காடு வாக்குப்பதிவு பதிவாக வேண்டும் என்ற வகையில் உக்கடம் சீர்மிகு நகரம் திட்டம் செயல்படுத்தப்படும் குளக்கரையில் மணல் சிற்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.
அதில், 100 விழுக்காடு வாக்குப்பதிவு, MY VOTE MY RIGHTS, தமிழ்நாட்டின் தேர்தல் தேதி, கைவிரலில் மை இருக்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார்.
இது பொதுமக்களை அதிகம் கவர்ந்துவருகிறது. அதேபோல தேர்தல் நாளில் வாக்களிக்க வேண்டும் என்பதை மையப்படுத்தி, வெள்ளி மோதிரம் ஒன்றையும் வடிவமைத்து அசத்தியுள்ளார்.