ETV Bharat / elections

கீழ்வேளூர் தொகுதி (தனி) பாமக வேட்பாளர் மாற்றம்! - பாமக வேட்பாளர் மாற்றம்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதி (தனி) பாமக வேட்பாளர் மாற்றப்பட்டார்.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதி (தனி) பாமக வேட்பாளர் மாற்றம்!

author img

By

Published : Mar 18, 2021, 2:49 PM IST

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் நாகை மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் (தனி) தொகுதியும் அடங்கும். இந்தத் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் நாகை மாலி போட்டியிடுகிறார்.

இத்தொகுதியில், முன்னதாக பாமக சார்பில் வேத. முகுந்தன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் வேட்பாளரை மாற்றி பாமக தலைமை அறிவித்துள்ளது.

இது குறித்து, அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’’தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் (தனி) தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வேத. முகுந்தன் மாற்றப்படுகிறார்.

அவருக்குப் பதிலாகக் கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் பாமக வேட்பாளராகப் போட்டியிடுவார் என பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ஆகியோரின் ஒப்புதலுடன் அறிவிக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வீட்டு இல்லத்தரசிகளுக்கு ஊதியம்; நாம் தான் முதலில் சொன்னோம் - கமல்ஹாசன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.