திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் ஆணையம் சார்பில் 100 விழுக்காடு வாக்குகள் பதிவு செய்ய வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் பூந்தமல்லி அருகே உள்ள செந்நீர் குப்பம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் தனியார் குடிநீர் ஆலைகளிலிருந்து வழங்கப்படும் 20 லிட்டர் தண்ணீர் கேன்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டி திருவள்ளூர் கோட்டாட்சியரும் தேர்தல் அலுவலருமான ப்ரீத்தி பார்கவி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இதுவரை சுமார் 20,000 ஸ்டிக்கர்களை தாங்கள் ஒட்டி இருப்பதாகவும், ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட கேன்களை அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதி மக்கள், தனியார் தொழிற்சாலைகளுக்கு விநியோகித்து வருவதால் பொதுமக்களை எளிதில் இது சென்றடையும் என்றூம் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மக்களின் சேமிப்புத் திறனை முடக்கும் அரசு - தொடர்ந்து குறைக்கப்படும் வட்டி!