ETV Bharat / elections

'திமுக பரப்புரை மேற்கொள்ளக்கூடாது' - அதிமுகவினர் அடாவடி

வேலூர் அருகே ஆட்டோ மூலம் பரப்புரையில் ஈடுபட்ட திமுக தொண்டரை பரப்புரையில் செய்யக்கூடாது என தாக்கிய அதிமுக பிரமுகரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

’’தங்கள் பகுதியில் திமுக பிரச்சாரம் மேற்க்கொள்ளக்கூடாது’’

author img

By

Published : Mar 23, 2021, 10:37 PM IST

வேலூர் மாவட்டம், குடியாத்தம் (தனி) தொகுதியில் அதிமுக சார்பில் பரிதா என்பவரும், திமுக சார்பில் அமழு விஜயன் என்பவரும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், அந்தந்த கட்சிகளின் பிரமுகர்கள் ஆட்டோ மூலம் வாக்கு கேட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று (மார்ச். 22) குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பேர்ணாம்பட்டு வடக்கு ஒன்றியம் புத்தூர் பகுதியில் திமுகவினர் ஆட்டோ மூலம் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, அங்கு வந்த அதிமுக பிரமுகர் சார்லஸ் என்பவர், 'தங்கள் பகுதியில் திமுக பரப்புரை மேற்கொள்ளக்கூடாது' எனக்கூறி தகாத வார்த்தைகளால் அவதூறாகப் பேசி, மைக்கில் பேசியவர் மீது எச்சில் துப்பியுள்ளார்.

மேலும், மைக்கை பிடித்து வம்பு செய்தவர் ஆட்டோவில் பேசிய நபரை தாக்கவும் செய்துள்ளார். பரப்புரை செய்ய வந்த நபரைத் தாக்கிய அதிமுக நபரின் இத்தகைய போக்கு அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் இது குறித்து பேர்ணாம்பட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

’’திமுக பரப்புரை மேற்கொள்ளக்கூடாது’’

இதையும் படிங்க: ஏப்ரல் 1 முதல் 45 வயதைக் கடந்தவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.