2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். தேர்தல் அறிக்கையில் முதல் பிரதியை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
அதன் முக்கிய அம்சங்களைக் காணலாம்
- திருக்குறளை தேசிய நூலாக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்
- அதிமுக மீதான ஊழல் புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும்
- இந்து கோயில்களைச் சீரமைக்க ரூ.1000 கோடி
- மசூதி, தேவாலயங்களை சீரமைக்க ரூ.200 கோடி
- 500 கலைஞர் உணவகம் அமைக்கப்படும்
- பத்திரிகையாளர்களுக்குத் தனி ஆணையம் அமைக்கப்படும்
- மகப்பேறு கால உதவித் தொகை ரூ.24,000
- வேலையில்லாப் பட்டதாரிகளுக்குக் குறுந்தொழில் தொடங்க ரூ. 20 லட்சம் வரை கடன் வழங்கப்படும்
- 10 வருடங்களுக்கு மேல் அரசுப் பணிகளில் தற்காலிகமாக பணியாற்றுபவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யப்படும்
- இயற்கை வேளாண்மைக்குத் தனிப்பிரிவு உருவாக்கப்படும்
- மத்திய பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளிலும் 8 ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக அறிவிக்கப்படும்.
- வடலூர் வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைக்கப்படும்
- அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவில் பால் வழங்கப்படும்
- தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றத் தனி அமைச்சகம்
- 30 வயதுக்கு உட்பட்டவர்கள் வாங்கிய கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும்
- ரயில் பாதை இல்லாத 16 முக்கிய வழித்தடங்களில் ரயில் பாதை அமைக்க வலியுறுத்துவோம்
- விவசாய பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை
- ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை துரிதப்படுத்தப்படும்
- கர்ப்பிணிகளுக்கு வீடு தேடி மருத்துவ வசதி அளிக்கப்படும்
- அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குக் கைக்கணினி வழங்கப்படும்
- கரோனாவால் உயிரிழந்த மருத்துவர், அரசுப் பணியாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்.
- பணியின் போது உயிரிழந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் நிதி ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்.
- அரசுப் பள்ளிக் கல்லூரி மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்கப்படும்
- வேலைவாய்ப்பில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 30 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடாக உயர்த்தப்படும்
- ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்
- தமிழ்நாட்டில் 75 விழுக்காடு வேலை தமிழர்களுக்கே எனச் சட்டம் இயற்றப்படும்
- மாநில வரியில் பெட்ரோலுக்கு ரூ.5, டீசல் ரூ.4 குறைக்கப்படும்
- கல்வி நிலையங்களில் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும்
- பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள புதிய திட்டம்
- ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4ஆயிரம்
- சமையன் எரிவாயு உருளைக்கு ரூ. 100 மானியம்
- கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்குக் கொண்டுவர நடவடிக்கை
- கனிமவளத் துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படும்
- ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும்
- முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படும்
- கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்
- தமிழ் எழுத்து வரி வடிவம் சிதைக்கப்படுவதைத் தடுக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும்
- அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் 70 வயதுக்கு மேல் 10%, 80 வயதுக்கு மேல் 10% உயர்த்தி வழங்கப்படும்
- இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்க நடவடிக்கை
- நீர்ப்பாசனத் துறைக்கு மாற்றாக புதிய நீர்வள அமைச்சகம் உருவாக்கப்படும்
- ஆதி திராவிடர்கள், பழங்குடியினருக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்படும்
- மாற்றுத் திறனாளிகளுக்குக் கட்டணமில்லா பயணச் சலுகை வழங்கப்படும்
- நியாய விலை கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும்
- 15,000 சிறு வணிகர்களுக்கு வட்டியில்லாக் கடன்
- சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பப்படும்
- பொங்கல் திருநாள் பண்பாட்டுத் திருநாளாகக் கொண்டாடப்படும்
- கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சொத்து வரி அதிகரிக்கப்படாது
- மாதம் ஒருமுறை மின்கட்டணம் வசூலிக்கப்படும்
- சட்டம் ஒழுங்கை காக்க உயிரிழந்த காவலர்களுக்கு ரூ.1 கோடி வழங்கப்படும்.
- சென்னையில் தூய்மையான குடிநீர் வழங்கப்படும்
- கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்
- 32 லட்சம் கைம்பெண்கள், மணமாகாத பெண்கள், மாற்றுத்திறனாளிகள், இலங்கை அகதிகள் ஆகியோருக்கு ஓய்வூதியம் ரூ.1500 ஆக அதிகரிக்கப்படும்
- ஜல்லிக்கட்டு காளைகள் வளர்த்தால், அதன் பராமரிப்பு செலவுக்காக மாதம் ரூ.1000 வழங்கப்படும்
- அதிமுக அரசால் ஏற்பட்டுள்ள கடன் சுமையைச் சீர் செய்யப் பொருளாதார குழு அமைக்கப்படும்
- மீனவ சமுதாயத்தினர் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்
- இலங்கை ஈழப் படுகொலை குறித்து சர்வதேச விசாரணை
- வெளிநாடு வாழ் தமிழர்களைப் பேண வெளிநாடு வாழ் அமைச்சகம் வழங்கப்படும்
- ரயில் பாதை இல்லாத 16 முக்கிய வழித்தடங்களில் ரயில் பாதை அமைக்க வலியுறுத்தப்படும்
- கோயம்புத்தூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை
- 50 லட்சம் மாணவர்களுக்குத் திறன் மேம்பாடு நிலையம் அமைக்கப்படும்
- ஆறுகளைக் காக்கத் தமிழ்நாடு ஆறுகள் பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்படும்
- விவசாயிகள் மின் மோட்டார்கள் வாங்க ரூ.10,000 நிதியுதவி
- 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்