ETV Bharat / elections

திமுக வேட்பாளர் பட்டியல் மார்ச் 10இல் வெளியீடு! - Latest DMK Nominees

dmk candidates list on march 10
dmk candidates list on march 10
author img

By

Published : Mar 5, 2021, 10:12 AM IST

Updated : Mar 5, 2021, 1:23 PM IST

10:05 March 05

சென்னை: திமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்று வரும் நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் மார்ச் 10ஆம் தேதி வெளியிடப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. கூட்டணி கட்சியினருடன் தொகுதிகளை இறுதி செய்யும் பணியில் திமுக விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளது. 

திமுகவில் மாவட்டச் செயலாளர்களாக இருப்பவர்கள் கண்டிப்பாக போட்டியிடுவது வழக்கம். கடந்த 10 ஆண்டுகளில் பலர் தோல்வியைத் தழுவினாலும் சுய பலத்தில் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குள் நுழைந்தவர்களும் இருக்கின்றனர்.

திமுகவில் தற்போது 99 சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்த 99 பேரும் மீண்டும் தொகுதி கேட்டு விருப்ப மனு அளித்துள்ளனர். ஏற்கெனவே, தொகுதிவாரியாக ஐவர் மற்றும் மூவர் பட்டியல் எனப்படும் உத்தேச வேட்பாளர் பட்டியலைத் தலைமைக்கு ஐபேக் குழு கொடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்கள் செல்வாக்கு இல்லாத சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு மீண்டும் தொகுதி ஒதுக்கக்கூடாது என்றும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இம்முறை சீட் ஒதுக்கக் கூடாது என்றும் சொல்லியிருக்கிறதாம் ஐபேக் குழு. இதனை அறிந்துதான் இம்முறை தேர்தலில் போட்டியிடப் பல புதுமுகங்கள் விருப்ப மனு கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விருப்ப மனு நேர்காணலின் போது பல தொகுதிகளுக்கு ஏராளமானோர் விருப்ப மனு கொடுத்திருந்தாலும் அருப்புக்கோட்டை, திருச்சுழியில் போட்டியிட தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர்களான ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு தவிர வேறு புதிதாக யாரும் மனு கொடுக்கவில்லை. எனவே அவர்கள் இருவர் மட்டுமே நேர்காணலில் பங்கேற்றனர்.

வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் முடிந்துள்ள நிலையில் மாவட்டச் செயலாளர்களுடன் காணொலிக் காட்சி மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போதுதான் மார்ச் 10ஆம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். 

இந்த முறை 200 தொகுதிகளில் களமிறங்க திமுக திட்டமிட்டுள்ளது. அந்த எண்ணத்தில்தான் கூட்டணி கட்சியினருக்கு அள்ளிக்கொடுக்காமல் இடங்களைக் கிள்ளிக்கொடுத்து வருகிறது என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சு நிலவுகிறது.

Last Updated : Mar 5, 2021, 1:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.