சேலம் முள்ளுவாடிகேட், சோமு தெரு பகுதி எண் 179 பகுதியில் வசித்துவருபவர் சிவப்பிரகாசம், அவரது மனைவி சாந்தி. இவர் வாக்களிக்க வந்தபொழுது அரசுப் பணியா எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், 7.30 மணிக்கு வந்த சாந்தி ஒரு மணி நேர காத்திருப்பிற்குப் பின் தனது அஞ்சல் வாக்கு எனத் தவறாகப் பதிவானது தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
சாந்தி ஒரு இல்லத்தரசி (52). தற்போது, 85 வயதிற்கு மேல் ஆனவர்கள்தான் அஞ்சல் வாக்கு அளிக்க வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது. ஆனால், ஊழியர்கள் அவர் வாக்கு பதியப்பட்டது என அவரை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. இதனால், சாந்தி ஏமாற்றம் அடைந்தார்.
இது குறித்து, செய்தியாளர்களிடம் கூறுகையில், மேலும், உயர் அலுவலர்களுடன் கலந்துரை செய்து அலுவலர்கள் அவரை வாக்களிக்க அனுமதித்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது என்றார்.
மேலும், வாக்களித்து வந்த சாந்தி முதல் முறை இப்படி நடக்கிறது எனவும், தன்னுடைய வாக்கு பறிபோய்விட்டதோ என கவலைக்குள்ளானதாகவும் தெரிவித்தார், வாக்களித்த பின்னரே மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் எனவும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: ஜனநாயகக் கடமையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி