திண்டுக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பாண்டி போட்டியிடுகிறார். இவர் திண்டுக்கல் மாநகராட்சி, ஊராட்சி ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளார்.
இந்நிலையில், பாண்டிக்கு ஆதரவாக நடிகை ரோகினி அசோக் நகர், கோவிந்தாபுரம், ஆர் எம் காலனி ஆகிய பகுதிகளில் வீடு வீடாக நடந்து சென்று பாண்டிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து திமுக தேர்தல் அறிக்கையை விளக்கிக் கூறியும் ஆண்கள் பெண்கள் எனப் பொதுமக்களிடம் பரப்புரை மேற்கொண்டார்.
இதையும் படிங்க: தேர்தல் பரப்புரையின் போது போக்குவரத்து தடை கூடாது!