சென்னை: துபாயிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் இன்று (பிப்.26) காலை சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத் துறை அலுவலர்கள் சோதனையிட்டனர்.
அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது நசிப் (21) என்ற பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனையிட்டனர். பின்னர், அவருடைய உடைமைகள் வைக்கப்பட்டிருந்த அட்டைப்பெட்டிகளை பிரித்து பார்த்தனர்.
அதில், மின்விசிறி, சூடேற்றி, நீராவி கருவிக்குள் இருந்தன. அதனை சோதித்து பார்த்தபோது, 52 தங்க தகடுகள் மறைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. ரூ.18.66 லட்சம் மதிப்பிலான 389 கிராம் எடைகொண்ட தங்கம் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த பயணியை கைது செய்த சுங்கத் துறை அலுவலர்கள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : 2.5 கோடி மோசடி செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் கைது!