ETV Bharat / crime

சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் - போக்சோ சட்டத்தில் 4 பேர் கைது! - madurai district news

மதுரையில் சிறுமியை காதலித்து கர்ப்பிணியாக்கி கருக்கலைப்பு செய்த இளைஞர் மற்றும் அவரது பெற்றோர் , நண்பர் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுமியை
சிறுமியை
author img

By

Published : Oct 5, 2021, 9:48 PM IST

மதுரை: பழங்காநத்தம் நேரு நகர் பகுதியைச் சேர்ந்த பூபதிராஜா(26). இவரின் தங்கையின் தோழியான 15 வயது சிறுமி வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து சிறுமி, தான் கர்ப்பமாக இருப்பதாக பூபதிராஜாவிடம் தெரிவித்துள்ளார். அதற்கு, தங்கையின் திருமணம் முடிந்த பிறகு உன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி , தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கர்ப்பத்தை கலைத்துள்ளார் பூபதிராஜா.

சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர்
சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர்

கர்ப்பத்தை கலைத்த பிறகு திருமணத்திற்கு மறுத்ததால் பூபதிராஜாவின் பெற்றோரிடம் அச்சிறுமி முறையிட்டுள்ளார். திருமணம் செய்து வைக்க இயலாது என்று கூறி அவர்கள் சிறுமியை மிரட்டியுள்ளனர்

இதற்கு பூபதிராஜாவின் நண்பர் சௌந்தரபாண்டியனும் உடந்தையாக இருந்ததாகக் கூறி, மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் காவல்துறையினர், பூபதிராஜா, அவரது தந்தை துரை, தாய் சுசீலா, நண்பர் சௌந்தரபாண்டியன் ஆகிய நான்கு பேர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பெற்ற தாயின் உதவியுடன் மகள் உள்பட 5 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை... சென்னையில் கொடூரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.