கேரளாவின் வர்காலாவில் இருந்து கர்நாடகாவின் மங்களூருவுக்கு சென்றுகொண்டிருந்த பெண் பயணிக்கு, பயணி ஒருவர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை, பாதிக்கப்பட்ட பெண் தனது இன்ஸ்டாகிராமில் நேரலை செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இது குறித்து மங்களூரு ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். பின்னர், அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதேபோன்ற இரண்டு வழக்குகள் சமீபத்தில் மங்களூருவில் பதிவாகியுள்ளதாக மாணவர் தலைவர் சுஹான் அல்வா தெரிவித்துள்ளார். மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நாங்கள் குரல் கொடுப்போம் என்றும் அவர் உறுதியளித்தார்.
இதையும் படிங்க...4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் போக்சோவில் கைது!