ETV Bharat / crime

கத்தி முனையில் வீடியோ - பாதிக்கப்பட்ட இளம்பெண் பரபரப்பு புகார் - இளம்பெண் பரபரப்பு புகார்

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் கத்தி முனையில் காரில் கடத்தி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியதாக இளம்பெண் ஒருவர் எஸ்பி அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

young woman complains to SP
young woman complains to SP
author img

By

Published : Jan 28, 2022, 5:28 PM IST

சேலம்: சூரமங்கலம் சுப்ரமணிய நகர் பகுதியில் வசித்து வரும் சங்கர் மகள் கலைச்செல்வி (35). இவர் கடந்த 27ஆம் தேதி சேலம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்தார்.

அந்த புகாரில், “ரியல் எஸ்டேட் மற்றும் ஜவுளி தொழில் செய்து வருகிறேன். இது தொடர்பாக அடிக்கடி மகுடஞ்சாவடி, இளம்பிள்ளை பகுதிகளுக்கு வந்து செல்வேன். அப்போது தொழில் ரீதியாக சில நபர்களுடன் பழக்கம் ஏற்பட்டது.

சில நாள்களுக்கு முன்பு நிலம் சம்பந்தமாக நான் மகுடஞ்சாவடிக்கு சென்றபோது , என்னை பின்தொடர்ந்து வந்த ரூபன், ரமேஷ் என்ற இருவரும் காரில் கடத்திச் சென்று இரண்டு நாள்களாக சித்திரவதை செய்தனர்.

ஒரு பெண் என்றும் பாராமல் கொடுமை செய்தனர். ஆம்னி காரில் என்னை கத்தி முனையில் மிரட்டி அரசியல் கட்சி பிரமுகர் செல்வம் உள்ளிட்ட சிலர் பெயரை தவறாகச் சொல்லச் சொல்லி அவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துகொண்டனர்.

கடத்தப்பட்ட பெண்

மேலும், கத்திமுனையில் மிரட்டியதால் என் உயிரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக சில அரசியல் பிரமுகர்களின் பெயரை தவறான முறையில் கூறினேன்.

அந்த வீடியோவை வைத்துக்கொண்டு ரூபன், ரமேஷ் அவர்களின் கூட்டாளிகள் என்னை மிரட்டி வருகிறார்கள். இச்சம்பவத்திற்கு பின்னால் யாரோ சதிவேலை செய்திகிறார்கள். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதனை பரவாமல் தடுக்கவும், என்னை கத்தி முனையில் மிரட்டி தவறாக வீடியோ எடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இளம்பெண் பரபரப்பு புகார்

இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வீடியோ பரவி வருவதால் தற்போது அப்பகுதி அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பாவின் பேத்தி தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.