திருச்சி: மணப்பாறை அடுத்த சரவணம்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன்.இவரது மூத்த மகள் சத்யா (17) கரூரில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். நேற்று(ஜன.9) ஊரடங்கு என்பதால் வீட்டில் இருந்த சத்யா, தனது தங்கை, தோழிகளுடன் அருகே உள்ள கிணற்றுக்கு குளிக்க சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் தத்தளித்தவாறு சத்யா கிணற்றுக்குள் மூழ்கியுள்ளார். இதுகுறித்து மணப்பாறை தீயணைப்பு துறை தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கிணறு முழுவதும் நீர் நிரம்பி இருந்ததால் மீட்பு பணி காலதாமதமானது.
இதையடுத்து கிணற்றுக்குள் கேமரா செலுத்தி உடல் இருந்த இடத்தை கண்டறிந்து, சுமார் நான்கு மணி நேரத்திற்கு பிறகு சத்யா இறந்த நிலையில் மீட்கப்பட்டார். அவரது உடல், மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து வையம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா பயத்தில் குடும்பமே விஷம் குடித்து தற்கொலை முயற்சி - இருவர் உயிரிழப்பு