ETV Bharat / crime

தொழிலாளி தற்கொலை; கந்து வட்டி சட்டத்தின்கீழ் 2 பேர் கைது - கந்து வட்டி சட்டத்தின்கீழ் 2பேர் கைது

சீர்காழி அருகே நாராயணபுரத்தில் வட்டிக்கு கொடுத்த பணத்தை கேட்டு வற்புறுத்தியதால் மனமுடைந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கந்து வட்டி சட்டத்தின்கீழ் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2பேர் கைது
2பேர் கைது
author img

By

Published : Jun 16, 2022, 12:57 PM IST

மயிலாடுதுறை:. சீர்காழி அருகே நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி(40). இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த கணபதி(36), கார்த்திகேயன்(35), விக்னேஷ் ஆகியோரிடம் கடனாக ரூ.20 ஆயிரம் வரை பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சுந்தரமூர்த்தியிடம் கணபதி, கார்த்திகேயன், விக்னேஷ் மூன்று பேரும் பணத்தைக் கேட்டு திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த சுந்தரமூர்த்தி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது தொடர்பாக, அவரது மனைவி கமலி திருவெண்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் நேற்று (ஜூன்15) கந்து வட்டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வட்டிக்கு பணம் கொடுத்த கணபதி, கார்த்திகேயன் ஆகிய இருவரையும் கைது செய்ததுடன் தலைறைவான விக்னேஷ் என்பவரைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: 'அரசு நிர்ணயித்த வட்டியை விட அதிக வட்டி வாங்குவோர் மீது கடும் நடவடிக்கை' - மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.