தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லாயல்மில் காலனியை சேர்ந்தவர் பிரபு(38). இவர் தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி உமாமகேஸ்வரி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், நேற்று(ஜன 23) அதிகாலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையில் உமாமகேஷ்வரி, பிரபுவை வெட்டி படுகொலை செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் கிடைத்தும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவலர்கள், பிரபுவின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் உமாமகேஷ்வரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உமாமகேஷ்வரியின் உடல் நலனை காரணம் காட்டி பிரபு இரண்டாவது திருமணம் செய்ய முயன்றதால் வெட்டி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.