விருதுநகர்: விருதுநகர் அருகே கதிரேசன் (43) கண்ணாடி கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கலையரசி (36) (பெற்றோரின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) தனியார் பிளாஸ்டிக் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகளும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இருவரும் விருதுநகரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் படித்து வருகின்றனர். மூத்த மகள் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். கதிரேசன் வேலைக்கு சென்றுவிட்டு மதியம் உணவு இடைவேளையின்போது வீட்டிற்கு வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
மூத்த மகள் கடந்த ஜனவரி மாதம் பள்ளி செல்லாமல் அன்று வீட்டில் இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து இதேபோன்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இரவில் மனைவியும் இளைய மகளும் உறங்கிய பின் கதிரேசன் மூத்த மகளை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
இதுகுறித்து தாய், தங்கையிடம் கூறினால் இருவரையும் கொலை செய்துவிடுவதாகவும் கதிரேசன் மிரட்டியுள்ளார். தந்தையின் தொல்லை தாங்க முடியாமல் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் கடிதம் எழுதிவைத்திருக்கிறார். பள்ளிக்குச் சென்றபோது அந்தக் கடிதம் பள்ளி வளாகத்தில் தவறி விழுந்து, அக்கடிதம் தலைமை ஆசிரியையின் கைக்கு கிடைத்ததுள்ளது.
கடிதத்தைப் படித்து அதிர்ச்சியடைந்த பள்ளித் தலைமை ஆசிரியர் சிறுமியின் தாய் கலையரசியை பள்ளிக்கு அழைத்துள்ளார். அவர் முன் சிறுமியிடம் விசாரித்தபோது அழுது கொண்டே தந்தை கதிரேசன் செய்த பாலியல் வன்கொடுமை செய்ததை சிறுமி கூறி அழுதுள்ளார். இதுகுறித்து, விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் கலையரசி புகார் அளித்தார். போலீஸார் போக்சோ வழக்குப்பதிந்து கதிரேசனை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.