ETV Bharat / crime

நண்பனைக் காப்பாற்றும் முயற்சியில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு! - இரண்டு பேர் உடல் மீட்பு

அருவியில் குளிக்கச் சென்றபோது நீரில் விழுந்த நண்பனைக் காப்பாற்றச் சென்ற மூன்று பேரில் இருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர்.

YOUNGSTER DIED
YOUNGSTER DIED
author img

By

Published : Jul 10, 2021, 3:49 PM IST

சென்னை: கொளத்தூரைச் சேர்ந்தவர் லோகேஷ் (24), இவரது மனைவி பிரியா (20). இவர்களது நண்பர்கள் யுவராஜ், பாலாஜி, கார்த்திக் (18). இவர்கள் ஐந்து பேரும் கடந்த ஜூலை 6ஆம் தேதி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதபாளையம் அருகே உள்ள தடா அருவியில் குளிக்கச் சென்றுள்ளனர்.

அங்கு காவல் துறையினர் அனுமதிக்காத நிலையில், அவர்களுக்குத் தெரியாமல் ஆபத்தான பகுதியில் சென்று குளித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது செல்பி எடுக்க முயன்ற யுவராஜ் தவறி நீரில் விழுந்துள்ளார்.

அவரைக் காப்பாற்ற பாலாஜி, கார்த்திக், லோகேஷ் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக கால்வாயில் குதித்துள்ளனர்.

இதில் யுவராஜ் தப்பிய நிலையில் மற்ற மூன்று பேரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இது குறித்து பிரியா கொடுத்த தகவலின்பேரில் வரதபாளையம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி நீரில் அடித்துச் செல்லப்பட்டவர்களைத் தேடினர்.

இதில் லோகேஷ், பாலாஜி ஆகியோர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். கார்த்திக் உயிரோடு கரை ஒதுங்கி இருக்காரா அல்லது நீரில் அடித்துச்செல்லப்பட்டாரா எனத் தெரியவில்லை.

மேலும் இது குறித்து வழக்குப்பதிந்த காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நண்பரை பார்க்க் சென்றவர் உயிரிழந்த நிலையில் மீட்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.