ETV Bharat / crime

உயிரிழந்த நிலையில் கிணற்றிலிருந்து இரண்டு பேர் உடல் மீட்பு! - தமிழ்நாடு செய்திகள்

உடலில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் இரண்டு பேரின் உடலை தீயணைப்புத் துறையினர் கிணற்றிலிருத்து நேற்று(ஜூன்.28) மீட்டனர்.

murder case
murder case
author img

By

Published : Jun 29, 2021, 8:15 PM IST

திருவண்ணாமலை: அடையாளம் தெரியாமல் கிணற்றில் உயிரிழந்து கிடந்த இருவர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்நகரைச் சேந்தவர் பிரபாகரன்(29). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. பிரபாகரனின் நண்பர் திருவண்ணாமலை புதுத்தெருவைச் சேர்ந்த அப்பு என்கிற வெங்கடேசன்(21). இருவரும் திருவண்ணாமலையில் உள்ள பழைய இரும்புக் கடையில் வேலைப் பார்த்து வருகின்றனர்.

நேற்று முன்தினம்(ஜூன்.27) வேலைக்குச் சென்ற இருவரும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் இருவரின் குடும்பத்தினரும் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இந்நிலையில், நேற்று(ஜூன்.28) காலை திருவண்ணாமலை அடுத்த சேரியந்தல் கிராமத்தில் உள்ள ஐயப்பன் நகர் பகுதியில் உள்ள விவசாய கிணற்றின் அருகே பிரபாகரனின் பைக்கும், சில மதுபாட்டில்களும், இரண்டு ஜோடி செருப்புகளும் இருந்துள்ளன.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அதைத் தொடர்ந்து, தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரத் தேடலுக்குப் பிறகு இருவரின் உடலையும் கிணற்றிலிருந்து எடுத்துள்ளனர்.

இவரின் உடல்களிலும் ஆங்காங்கே காயங்கள் இருந்துள்ளன. இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நட்பு குறித்து பேசும் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு'!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.