திருநெல்வேலி: வடக்கு தாழையூத்து பகுதியைச் சேர்த்த கண்ணன் என்பவரின் மகன் சக்தி(10) மற்றும் வெங்கடேஷ் என்பவரின் மகன் கார்த்திக்(13) ஆகிய இரண்டு சிறுவர்களும் அதே பகுதியில் உள்ள கல்குவாரிக்கு குளிக்க சென்றுள்ளனர்.
அப்போது, இருவரும் ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கினர். இதை கவனித்த அருகிலிருந்தவர்கள் தாழையூத்து காவல் துறையினருக்கு தகவல்கொடுத்தனர். அதனடிப்படையில், அங்கு விரைந்த காவலர்கள் சிறுவர்களின் உடல்களை மீட்டு, உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், முதல்கட்ட தகவலில், அந்த கல்குவாரி பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லை என்பதும், இங்கு குளிக்க அடிக்கடி அக்கம்பக்க கிராமத்தினர் வருகை தருவதும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: மாணவியை ஆபாசமாகப் புகைப்படம் எடுத்து மிரட்டல்: ஜிம் மாஸ்டர் கைது