சென்னை கிண்டி பகுதியில் பேருந்து நிலையம் அருகே முதியவர் ஒருவரிடம் உடமைகளை திருட முயன்ற இருவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடிகொடுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கிண்டி காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். பிடிபட்ட இருவரும் தெலுங்கு மொழி பேசியதுடன் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர்.
7 செல்போன்கள் திருட்டு
இதனையடுத்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் 7 செல்போன்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்ற காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
முதியவர்களை குறிவைத்து திருட்டு
இதில், பிடிபட்டவர்கள் ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (35) மற்றும் நம்முலு ராஜ் (47) என்பதும், கொத்தனார் வேலை செய்துவரும் இவர்கள் சென்னையின் பல்வேறு பேருந்து நிலையங்களிலும் முதியவர்களை குறிவைத்து திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
பின்னர் அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த கிண்டி காவல் துறையினர், மேலும் எங்கெல்லாம் திருட்டில் ஈடுபட்டுள்ளனர் எனபது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: காதலியை 17 முறை கத்தியால் குத்திக்கொன்ற இளைஞன்: கேரளாவில் பயங்கரம்