ராணிப்பேட்டை: கலவை அருகே உள்ள சென்னசமுத்திரம், மோட்டூர் டேங்க் தெருவை சேர்ந்த சேகர் மகன் விஜயகுமார் (25). இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் பெண்ணின் வீட்டில் இவ்விஷயம் தெரிய வரவே தனது மகளை பனப்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.
சிறுமி 6 மாதமாக அங்கு இருந்துள்ளார். ஒரு மாதத்துக்கு முன்பு மீண்டும் தனது சொந்த ஊரான சென்னசமுத்திரம் மோட்டூர் பகுதிக்கு வந்துள்ளார். அப்பொழுது நீண்ட நாட்களாக விஜயகுமார் சிறுமியிடம் பலமுறை பேச முயன்றுள்ளார். ஆனால் சிறுமி விஜயகுமாருடன் பேச மறுத்துவிட்டதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார் சிறுமி தனியாக வந்தபோது மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியை கொண்டு சிறுமியின் கழுத்தை அறுத்துள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த சிறுமியை உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுமிக்கு கலவை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் சேர்க்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து கலவை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணன்மூர்த்தி வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள விஜயகுமாரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.,வை கடத்தி சென்று ரூ.1.50 கோடி பணம் பறித்ததாக அதிமுக நிர்வாகி மீது புகார்