ETV Bharat / crime

உதவி ஆணையர் மகளிடம் சில்மிஷம் - போக்குவரத்து காவலர் கைது - சென்னை அண்மைச் செய்திகள்

உதவி கமிஷனர் மகள், அவரது தோழியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தலைமை காவலர் கைது செய்யப்பட்டார்.

போக்குவரத்து காவலர் கைது
போக்குவரத்து காவலர் கைதுபோக்குவரத்து காவலர் கைது
author img

By

Published : Sep 8, 2021, 6:52 PM IST

சென்னை: போரூர் போக்குவரத்துப் பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிபவர் குமரன்(50). இவர் போரூர் அடுத்த ஐயப்பன்தாங்கலில் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள உணவகம் வழியே வந்த இரண்டு இளம்பெண்களில் ஒருவர் மீது குமரன் கையை வைத்து பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சிக்குள்ளான இளம்பெண், இதுகுறித்து போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவலர் குமரன் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து அவர் சில்மிஷத்தில் ஈடுபட்டது காவல் உதவி ஆணையரின் மகள் எனவும் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சாலையில் தூக்கி வீசப்பட்ட பெண் உடலுக்கு உடற்கூராய்வு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.