ETV Bharat / crime

கள்ளக்குறிச்சியில் வழிப்பறி: மூவர் கைது - கள்ளக்குறிச்சி அண்மைச் செய்திகள்

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணம் பறிப்பு, பெண்ணிடம் செயின் பறிப்பு ஆகிய குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளரின் மகன் உள்ளிட்ட மூவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மூவர் கைது
மூவர் கைது
author img

By

Published : Jul 3, 2021, 3:27 PM IST

கள்ளக்குறிச்சி: கடந்த ஜூன் 20ஆம் தேதி சின்னசேலம் அருகே உள்ள நமச்சிவாயபுரம் கிராம பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய மூன்று இளைஞர்கள், அவரிடமிருந்து பணத்தை பறித்து சென்றனர். இதே மூவர் அடுத்ததாக கடந்த ஜூன் 25ஆம் தேதி, கள்ளக்குறிச்சி கவரை தெருவில் நடந்து சென்ற பெண்ணிடம் இரண்டரை சவரன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர்.

இந்த இரு சம்பவங்கள் குறித்து கள்ளக்குறிச்சி, சின்னசேலம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். சின்னசேலம் காவல் நிலைய ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையிலான காவலர்கள் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று (ஜூலை 2) சின்னசேலம் அருகே கனியாமூர் பஸ் நிறுத்தத்தில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த மூவரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மாமந்தூர் பகுதி முகமது ரஷீத் (21), பிரிதிவிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் (21), பசுங்காயமங்கலத்தைச் சேர்ந்த நிதிஷ்குமார் (21) ஆகிய இவர்களே பணம் பறிப்பு, தங்கச் சங்கிலி பறிப்பு ஆகிய குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்பது உறுதியானது.

இதில் பிடிபட்ட நிதிஷ்குமாரின் தந்தையான கேசவப்பிள்ளை காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

அவர்களிடம் இருந்து இரண்டரை சவரன் தங்க செயின், வழிப்பறியில் ஈடுபட பயன்படுத்திய விலை உயர்ந்த மூன்று இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மூவரையும், கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

மேலும் குற்றம் நடைபெற்ற 10 நாள்களுக்குள் வழிப்பறி கொள்ளையர்களைப் பிடித்த காவலர்களுக்கு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

இதையும் படிங்க: பிரபல கார் திருடன் உள்ளிட்ட மூவர் தாம்பரத்தில் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.