ETV Bharat / crime

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு - உடந்தையாக இருந்த 2 பெண்கள் உள்பட மூவர் கைது! - chennai crime

சென்னையில் 4 வயது சிறுமி முதல் 17 வயது சிறுமி வரை 5 சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த நபரும், உடந்தையாக இருந்த இரண்டு பெண்களும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமிகள் பாலியல் வன்முறை
சிறுமிகள் பாலியல் வன்முறை
author img

By

Published : Aug 30, 2021, 2:17 AM IST

சென்னை: கடையில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்த கைதான நபரை, விசாரணை செய்தபோது அவர் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை டி.பி.சத்திரம் ஆர்வி நகர் ஒன்றாவது தெரு பகுதியில் மாரியம்மன் கூல் பார் என்ற பெயரில் பெருமாள் (48) என்பவர் பெட்டிக் கடை நடத்தி வருகிறார்.

இவரது கடையில் குட்கா பொருள்கள் விற்பனை நடைப்பெறுவதாக டிபி சத்திரம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்ததின் பெயரில், கடையை சோதனை செய்த பொழுது கடையில் 30 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து பெருமாளை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், குட்காவை எங்கிருந்து வாங்குகிறார் என்பதை தெரிந்துக்கொள்ள செல்போனை கேட்டபோது, பெருமாள் தரமறுத்ததால் காவல் துறையினருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. தொடர்ந்து வலுகட்டாயமாக அவரின் செல்போனை பறித்து காவல் துறையினர் சோதனை செய்தனர்.

சிக்கிய பெருமாள்

அதில் பெருமாள் சிறுமிகள் பலருக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்து, அதனை வீடியோவாக பதிவுசெய்து வைத்து இருந்ததைக் கண்டு காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

சிறுமிகளின் ஆபாச படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், இது குறித்து உயர் அலுவலர்களுக்கும், குழந்தைகள் நல ஆணையத்திற்கும் தகவல் அளித்து பாதிக்கப்பட்ட சிறுமிகளை மீட்டு அவர்களிடம் இது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது தான் காவல் துறையினருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது.

சிறுமிகளிடம் விசாரணை

ஒன்பது வயது சிறுமியிடம் நடத்திய விசாரணையில் அவரது தாயுக்கு தெரிந்தே இந்த பாலியல் கொடுமைகள் நடந்துள்ளதும், சிறுமியின் 30 வயது தாய் பெருமாளுடன் கடந்த 2 வருடமாக திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்ததும் தெரியவந்தது.

பின்னர், அந்த 30 வயது பெண்ணின் சகோதரியான 28 வயது பெண்ணுடனும் பெருமாளுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த சிறுமியின் தாய், பெருமாளுடனான தொடர்பை துண்டிக்க முடியாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது மகளுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்களை கண்டும் காணாமல் இருந்துள்ளார்.

பெருமாளின் பாலியல் சீண்டல்கள் எல்லை மீறி சிறுமியின் வீட்டுக்கு வரும் சிறுமியின் தோழிகளான 11 வயது, 4 வயது சிறுமிகளிடமும் தொடர்ந்திருக்கிறது. இத்தனை கொடுமைகளும் பெருமாளுடன் தொடர்பில் இருந்த சகோதரிகள் வீட்டில் நடந்துள்ளன.

பாய்ந்தது போக்சோ

இதுவரை பெருமாள் இதேபோல 5 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. மேலும், சிறுமிகளை பாலியல் கொடுமை செய்வதற்கு 500 முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை பெருமாள் கொடுத்தது தெரியவந்தது.

சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததை வீடியோ பதிவும் செய்து வைத்திருந்த பெருமாளை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல் துறையினர், சிறுமிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களுக்கு உடந்தையாக இருந்த இரு பெண்களையும் போக்சோவில் கைதுசெய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.