ETV Bharat / crime

மதுபாட்டில்கள் கடத்திய மூவர் கைது! - தமிழ்நாடு செய்திகள்

தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் பகுதியில் டாட்டா சுமோ காரில் மது கடத்திய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 904 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Liquor bottle
Liquor bottle
author img

By

Published : Jul 2, 2021, 6:27 AM IST

கோயம்புத்தூர் : கரோனா காரணமாக திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. இந்த மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் ஒரு சிலர் அருகிலுள்ள திண்டுக்கல், மதுரை மாவட்டத்திலிருந்து மதுபாட்டில்கள் வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இதனைத் தடுக்க காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், குண்டடம் காவல்துறையினர் கோவை சாலையில் உள்ள சூரியநல்லூர் சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக வந்த டாட்டா சுமோ காரை நிறுத்தி சோதனை செய்ததில் வாகனத்தில் இருந்த நபர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த காவல்துறையினர் காரில் சோதனை செய்தபோது 904 மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து நடந்த விசாரணையில் அவர்கள் மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த சிலம்பரசன் (32) , மதுரையை சேர்ந்த ராஜா முகமது (25), நத்தம் கருவை முளையூரை சேர்ந்த கண்ணன் (50) என்பது தெரியவந்தது. தொடர்ந்து, அவர்களிடமிருந்த 904 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அதன்பின்னர், குண்டடம் ஆய்வாளர் ஆனந்த் மூன்று நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.