ETV Bharat / crime

ஏரியாவில் கெத்து காட்ட முயற்சித்த மூவர்- கொத்தாக தூக்கிய காவல்துறை - ரவுடியாக கெத்த காட்ட முயற்சித்தவர்கள் கைது

ரவுடியாக தங்களை அடையாளப்படுத்தி கெத்துக்காட்ட வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய 3 பேரை 12 மணி நேரத்துக்குள் காவல்துறையினர் கைது செய்தனர்.

three arrested by police for attacking two persons and vehicles
ரவுடி என கெத்து காட்ட முயற்சித்தவர்கள் கைது
author img

By

Published : Sep 16, 2021, 5:52 AM IST

Updated : Sep 16, 2021, 5:58 AM IST

சென்னை: சென்னை கே.கே. நகர், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் சுற்றிய 3 பேர் கொண்ட கும்பல் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்ணாடிகளை கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அடித்து நொறுக்கியது.

அதுமட்டுமல்லாமல் இதே கும்பல் வளசரவாக்கம் பகுதியில் பால் விநியோகம் செய்யும் நபர், டெலிவரி பாய் ஆகியோரையும் கத்தியால் தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளது.

இதைத்தொடர்ந்து தியாகராய நகர் துணை ஆணையர் ஹரி கிரண் பிரசாத், சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார்.

தனிப்படை அமைப்பு

பின்னர், சம்பந்தப்பட்ட காவல் எல்லைக்குள் நடைபெற்றச் சம்பவங்களை அந்தந்தப் பகுதி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்காண்டுவந்தனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த திருட்டு ராஜேஷ், ஆதி ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் கே.கே. நகர் பகுதியில் வாகனங்களை உடைத்து சேதப்படுத்தியதுடன், இருவரை கத்தியால் தாக்கி காயப்படுத்தியது விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா (எ) ஆஹா கார்த்திக், அரவிந்தன் (எ) பட்டானி அரவிந்தன், 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

கெத்துக்காக செய்ததாக வாக்குமூலம்

இதனையடுத்து பதுங்கியிருந்த அந்த மூவரையும் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், தங்கள் பகுதியில் உள்ள ரவுடிகள் அனைவரும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதால் தங்களை ரவுடிகளாக அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பியதாகவும், அதன்படி கெத்துகாட்டுவதற்காக போதை மாத்திரை, கஞ்சா போதையில் வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கியதாகவும் வாக்குமூலம் அளித்தனர்.

இந்த மூவரும் காவல்துறையினரால் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தி, சிறுவனை கெல்லிஸ் சீர்திருத்தப் பள்ளியிலும் மற்ற இருவரை சிறையிலும் அடைத்தனர்.

இதையும் படிங்க: இளைஞர் படுகொலை: பழி தீர்க்க நடந்த கொலையா என போலீஸ் விசாரணை

Last Updated : Sep 16, 2021, 5:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.