ETV Bharat / crime

ரிச்சி ஸ்ட்ரீட் செல்போன் கடைகளில் திருட்டு... சிசிடிவி காட்சி மூலம் விசாரணை... - Ritchie Street

ரிச்சி ஸ்ட்ரீட்டில் தொடர்ச்சியாக 5 செல்போன் கடைகளின் பூட்டை உடைத்து பல லட்சம் மதிப்புள்ள செல்போன், உதிரிபாகங்கள் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளது.

செல்போன் கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு; சிசிடிவி காட்சி மூலம் விசாரணை

author img

By

Published : Sep 2, 2022, 1:02 PM IST

சென்னை: ரிச்சி ஸ்ட்ரீட்டில் 1,000க்கும் மேற்பட்ட செல்போன் மற்றும் உதிரிபாக விற்பனை கடைகள் உள்ளன. இந்த கடைகளில் அடிக்கடி கொள்ளை சம்பவங்களும் நடந்துவருகின்றன. அந்த வகையில் நேற்றிரவு தொடர்ச்சியாக 5 செல்போன் மற்றும் உதிரிபாகங்கள் கடைகளின் பூட்டை உடைத்து லட்சக்கணக்கான மதிப்புள்ள செல்போன்கள், ஸ்மார்ட் வாட்ச், லேப்டாப், ஹெட்போன் மற்றும் உதிரிபாகங்கள் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளன. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கடைகளின் உரிமையாளர்கள் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சிசிடிவி காட்சி

இதனிடையே அந்த கடைகளில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று, கடைகளை நோட்டமிட்டு, பூட்டை உடைத்து உள்ளே நுழைகிறது. ஒருவர் உள்ளே நுழைந்து திருடுகிறார். இரண்டு பேர் வெளியே காவலுக்கு இருக்கின்றனர்.

இதையும் படிங்க: கர்நாடகாவில் முருக மடாதிபதி பாலியல் புகாரில் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.