காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்துள்ள எச்சூர் கிராமத்தில் மேட்டுத் தெருவில் வசித்துவருபவர் திலகம் (47). இவர்களுக்கு புவனா என்கிற மகளும் ஆனந்தன் (23) என்கிற மகனும் உள்ளனர். ஆனந்தன் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றிவந்தார்.
இந்நிலையில் ஆனந்தன் அடிக்கடி மது அருந்திவிட்டு அவரது குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டுவந்தார். இதனால் மூவரும் எச்சூர் கிராமத்தில் உள்ள வீட்டைவிட்டு வெளியேறி சுங்குவார்சத்திரம் பஜாரில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்துவந்துள்ளனர்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஆனந்தன் நள்ளிரவில் வாட்ஸ்அப்பில், தான் இறந்துவிட்டதாக ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு கூரை வீட்டில் புடவையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
அதைத் தொடர்ந்து ஆனந்தனின் நண்பர்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் அறிந்து காலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சுங்குவார்சத்திரம் காவல் துறையினர் ஆனந்தனின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து உறவினர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். தனிமையில் வசித்துவந்த இளைஞர் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞர் - வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ்
காஞ்சிபுரம்: சுங்குவார்சத்திரம் அருகே தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்த இளைஞர் ஒருவர் மன உளைச்சலால் தனது வாட்ஸ்அப்பில், தான் இறந்துவிட்டதாக ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.