ETV Bharat / crime

இமாச்சல பிரதேசத்தில் மாதுளை பழ பெட்டிகளில் வெட்டப்பட்ட ரூபாய் நோட்டுகள்... போலீஸ் விசாரணை - மாவட்ட காவல்துறை

இமாச்சலப் பிரதேசத்தில் மாதுளைப் பெட்டிகளில் இருந்து வெட்டப்பட்ட 500, 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இமாச்சல பிரதேசத்தில் மாதுளை பழ பெட்டிகளில் வெட்டப்பட்ட ரூபாய் நோட்டுகள்... போலீஸ் விசாரணை

author img

By

Published : Sep 13, 2022, 12:50 PM IST

சோலன்: இமாச்சலின் சோலனில் உள்ள மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்திருந்த மாதுளை பழ பெட்டிகளில் பழங்களை பேக்கிங் செய்வதற்கு வெட்டப்பட்ட ரூபாய் நோட்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் இதுபோன்ற சம்பவம் ஒன்று அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

மாதுளை, ஆப்பிள் போன்ற பழங்களை பெட்டியில் பேக் செய்யும் போது துண்டுகளாக வெட்டப்பட்ட பேப்பர்கள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், சோலனில் உள்ள பழ வியாபாரிகளுக்குச் சென்றடைந்த மாதுளைப் பெட்டிகளில் உள்ள பேப்பர் துண்டுகள் இந்திய ரூபாய் நோட்டுகளின் வெட்டப்பட்ட விளிம்புகள் போல இருந்தன. புதிய 100, 200 மற்றும் 500 நோட்டுகளின் விளிம்புகள் போல் இருந்த அந்த காகிதங்களை கண்டு வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மக்கள் ஆர்வமுடன் அந்த பேப்பர்களை எடுத்துச்செல்கின்றனர்.

இமாச்சல பிரதேசத்தில் மாதுளை பழ பெட்டிகளில் வெட்டப்பட்ட ரூபாய் நோட்டுகள்... போலீஸ் விசாரணை

இதுகுறித்து பழ வியாபாரிகள் சாஹில், முகமது ஜாகிர் கூறியதாவது,” இந்த மாதுளை குழுவில் இருந்து சண்டிகருக்கு அனுப்பப்பட்டு, சண்டிகரில் இருந்து சோலன் சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இங்கு பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்பனை செய்து வருகிறோம், ஆனால் மாதுளையில் இந்த வகையான பேக்கிங் பொருள் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை. இதில் 100, 200, 500 ரூபாய் நோட்டுகளின் வெட்டப்பட்ட விளிம்புகள் இருப்பது தெளிவாக தெரிகிறது. நேற்றைய தினம் கூட மாதுளை பெட்டியில் இதுபோன்ற பேப்பர்கள் இருந்ததாக கூறினார்.

மாதுளை பெட்டியில் வெட்டப்பட்ட ரூபாய் நோட்டுகளின் விளிம்புகள் இருந்தது குறித்து விற்பனையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சோலன் எஸ்பி வீரேந்திர சர்மா தெரிவித்தார். அதேநேரம், தடயவியல் குழுவுக்கும் இந்த விவகாரம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர் என்றார்.

இமாச்சல பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் தற்போது மாதுளை சீசன் என்பது குறிப்பிடத்தக்கது. மாதுளைக்கான பெட்டி மற்றும் பேக்கிங் பொருட்கள் பிற மாநிலங்களில் இருந்து வருகிறது. விவசாயிகள் மாதுளையை தொட்டியில் எடுத்துக்கொண்டு காய்கறி சந்தைக்கு செல்கின்றனர்.

அங்கிருந்து வெளி மாநிலங்களில் இருந்து வரும் முகவர்கள் பேக்கிங் பொருட்கள் மற்றும் பெட்டிகளை கொண்டு வருகின்றனர். இதற்குப் பிறகு இங்கிருந்து சண்டிகர், ஹரியானா, உ.பி மற்றும் பிற மாநிலங்களுக்கு மாதுளை சப்ளை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 60 இடங்களில் என்ஐஏ சோதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.