கன்னியாகுமரி: கேரள மாநிலத்தில் ஓண பண்டிகை கொண்டாட்டங்கள் தொடங்கி உள்ள நிலையில், தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு போலிமதுபானம் கடத்தப்படுகிறது. அவை போலியாக ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் மார்தாண்டம் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது தென்னை ஓலைகளை ஏற்றி வந்த சிறிய ரக சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது பிளாஸ்டிக் கேன்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் ஓலைகளுக்கு அடியில் மறைத்து வைக்கப்படிருந்தன. அதில் போலி மதுபானம் இருந்துள்ளது. உடனே அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: தொடர் கஞ்சா சப்ளையில் ஈடுபட்ட இளைஞர்கள் குண்டர் சட்டத்தில் கைது