ETV Bharat / crime

பாலியல் புகாரில் சிக்கிய மாஜி அமைச்சர் வாக்குமூலம்! - சிறப்பு விசாரணை குழு

கர்நாடகாவில் பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி சிறப்பு விசாரணை குழு முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

Ramesh Jarakiholi CD case CD gate Special Investigation Team Karnataka CD case Jarkiholi CD case பாலியல் புகார் கர்நாடகா ரமேஷ் ஜர்கிஹோலி சிறப்பு விசாரணை குழு அமைச்சர் வாக்குமூலம்

author img

By

Published : Mar 16, 2021, 7:08 PM IST

பெங்களூரு: பாலியல் புகார் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆஜராகி தனது வாக்குமூலத்தை அளித்துள்ள நிலையில் சம்பந்தப்பட்ட பெண் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.

கர்நாடகாவில் பிஎஸ் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்றுவருகிறார். இந்த ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் ரமேஷ் ஜர்கிஹோலி. இவர் தொடர்பாக பாலியல் காணொலி பதிவுக் காட்சிகள் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

முதலில் இந்தக் காணொலிக் காட்சி பதிவுகளில் இருப்பது தாம் அல்ல என்று மறுப்பு தெரிவித்தார். மேலும் இதை நிரூபித்தால் அமைச்சர் பதவியை அல்ல, அரசியலை விட்டே வெளியேறுவேன் என்றெல்லாம் வீரவசனங்கள் பேசினார்.

அடுத்த சில மணி நேரங்களில் முதலமைச்சரவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கி பொட்டிப் பாம்பாக அடங்கினார். இந்நிலையில் இவரின் ராஜினாமா கடிதமும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணை குழு முன்னிலையில் இன்று (மார்ச் 16) ஆஜராகி முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

அதில், “சம்பந்தப்பட்ட பாலியல் காட்சிகளில் இருப்பது நான் அல்ல. முதலில் என்னிடம் காணொலிக் காட்சிகளை காண்பித்து பணம் பறிக்க திட்டமிட்டனர். இதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை, ஆகவே காணொலிக் பதிவை வெளியிட்டு என் பெயரை கெடுக்க முயற்சித்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் இதுவரை காணொலி பதிவில் இருக்கும் பெண் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவரின் வீட்டில் நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன. எனினும் அவர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.

அமைச்சர் தொடர்பாக காணொலி பதிவை சமூக ஆர்வலர் தினேஷ் கலாஹள்ளி வெளியிட்டார். இதையடுத்து, கர்நாடக மாநில அரசியலில் ஒரு பெரிய சர்ச்சை வெடித்தது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.