ETV Bharat / crime

எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை: செல்போன் செயலி உதவியது - கும்பல் தலைவன் வாக்குமூலம்

ஏடிஎம்மில் பணத்தின் இருப்பை அறிந்துகொள்ள தனியாக ஒரு செல்போன் செயலியை பயன்படுத்தி, அதன்மூலம் எஸ்பிஐ ஏடிஎம்மில் கொள்ளையடித்ததாக காவல்துறையினர் விசாரணையில் கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

author img

By

Published : Jul 8, 2021, 2:39 AM IST

Updated : Jul 8, 2021, 11:30 AM IST

எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை
எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை

சென்னை: தமிழ்நாடு முழுவதிலும் எஸ்பிஐ வங்கியின் டெபாசிட் ஏடிஎம்களை குறிவைத்து ஹரியானா கும்பல் கைவரிசை காட்டி பல லட்சங்களை கொள்ளையடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, சென்னை தனிப்படை காவல்துறையினர் ஹரியானாவிற்கு விரைந்து கொள்ளையில் ஈடுபட்ட அமீர் அர்ஷ், வீரேந்தர ராவத், நஜீம் உசைன், கொள்ளை கும்பல் தலைவனான சவுகத் அலி ஆகிய நான்கு பேரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து சிறையிலடைத்தனர்.

சமீபத்தில் கைது செய்யப்பட்ட, இந்தக் கொள்ளை கும்பல் தலைவன் சவுகத் அலியை பெரியமேடு காவல்துறையினர் 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த விசாரணையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெரியமேடு ஏடிஎம்

குறிப்பாக பெரியமேடு எஸ்பிஐ ஏடிஎம்மில் மட்டுமே 190 முறை ஸ்வைப் செய்து 16 லட்ச ரூபாயை இந்த கும்பல் கொள்ளையடித்துள்ளது. ஜூன் 15, 16 என இரு தினங்களில் சவுகத் அலியும், ஜூன் 17, 18 தேதிகளில் வேறு நபர்கள் என பிரித்து பெரியமேடு ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

செயலியின் உதவி

கொள்ளையடிப்பதற்காக செல்லக்கூடிய ஏடிஎம் மையங்களில், பணம் இருப்பு எவ்வளவு உள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்காக ஹரியானா கொள்ளையர்கள் செல்போன் செயலி ஒன்றை உருவாக்கி, அதனைப் பயன்படுத்தியிருப்பது விசாரணையில் தெரியவந்தது. அந்தச் செயலியை பயன்படுத்தியே ஹரியானா கும்பல் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

எஸ்பிஐ ஏடிஎம்-இல் பதிவான சிசிடிவி காட்சிகள்

ஹரியானாவில் பயிற்சி முகாம்

எஸ்பிஐ டெபாசிட் ஏடிஎம் மிஷின்களில் கொள்ளையடிப்பது குறித்தான முழு பயிற்சியை ஹரியானாவில் மேற்கொண்டதாகவும், காவல்துறையிடம் சிக்கினால் விசாரணையின் போது எப்படி பதிலளிக்க வேண்டும் போன்ற பயிற்சியையும் ஹரியானா கும்பல் மேற்கொண்டிருப்பது சவுகத் அலியிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

துருவி துருவி...

சவுகத் அலியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது தொடர்ந்து மழுப்பலாகவே பதிலளித்து வருவதால் காவலர்கள் வேறு யுக்தியை கையாள முடிவு செய்துள்ளனர். கொள்ளை கும்பலின் தலைவன் சவுகத் அலி என்பதால் எஸ்பிஐ ஏடிஎம்மில் கொள்ளையில் ஈடுபட்டது எப்படி என நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்தவும் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

கொள்ளையர்கள் பயன்படுத்திய செயலியின் பெயர் என்ன? கொள்ளையடிக்கப்பட்ட பணம் குறித்த விவரங்கள் போன்றவற்றை சவுகத் அலியிடம் விசாரிக்க பெரியமேடு காவல்துறையினர் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஏடிஎம்மில் நூதன முறையில் கொள்ளையடிக்க கற்றுத் தந்தது யார்? - காவல் துறையினர் விசாரணை

Last Updated : Jul 8, 2021, 11:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.