சென்னை: அண்ணா நகரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றுபவர் சரவணன். இவர் நேற்று (ஏப்.12) மாலை இந்திய மதிப்பில் ரூ. 40 லட்சம் வெளிநாட்டு பணத்தை ஒரு பையில் வைத்துக்கொண்டு தி.நகரில் உள்ள மற்றொரு தனியார் நிறுவனத்தில் ஒப்படைக்க தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அண்ணா நகரிலிருந்து தி.நகர் சவுத் போக் சாலையில் உள்ள நிறுவனத்திற்கு வந்த அவர், நிறுவனத்தின் அருகில் திடீரென மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவசர ஊர்தியை அழைத்து அவரை உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் கண் விழித்தபோது தனது கைப்பையில் வைத்திருந்த ரூ.40 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை காணவில்லை என்று சரவணன் தனது அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அலுவலக மேலாளர் சதீஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில், மாம்பலம் காவல் துறையினர் சரவணனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சாதி மோதலை தூண்டிய நாளிதழ்: நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்!