விழுப்புரம் டவுன் போலீஸ் ஸ்டேஷனின் பின் பகுதியில் பெண் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக நேற்று பொதுமக்கள் மத்தியில் பொய்யான தகவல் பரவியது. அதனடிப்படையில் போலீசார் ஸ்டேஷனின் பின் பகுதியில் சோதனையிட்டனர். அப்போது பெண்ணின் தலையுடன் துண்டிக்கப்பட்ட கூந்தல் கிடந்துள்ளது. அதனை கைப்பற்றிய போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். அதன்பின் போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதில், விழுப்புரம் டவுன் போலீஸ் ஸ்டேஷனின் பின் பகுதியில் மீட்கப்பட்ட பெண்ணின் தலை, 2020ஆம் ஆண்டு உயிரிழந்த அடையாளம் தெரியாத பெண்ணின் உடையது. இதனை போலீசார் கைப்பற்றி உடற்கூறாய்வு செய்து ஸ்டேஷனின் பின்பக்க அறையில் பாதுகாப்பாக பெட்டகத்தில் வைத்திருந்தனர். அந்த பெட்டகம் மழையின் காரணமாக முழுவதும் சிதிலமடைந்து விட்டது. அதிலிருந்து பெண்ணின் தலை வெளியே விழுந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தாய், மனைவி, குழந்தைகளை கொலை செய்த நபர் கைது