ETV Bharat / crime

16 வயது சிறுமியை ஏமாற்றித் திருமணம், பாலியல் வன்புணர்வு: இளைஞர் மீது பாய்ந்த போக்சோ - Pokcho Act

சென்னை அருகே சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் மீது ராயபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

author img

By

Published : Jul 1, 2021, 6:35 AM IST

சென்னை: எண்ணூர், நேதாஜி நகர் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த மூன்று நாள்களாக காணவில்லை எனவும், காசிமேடு பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் சிறுமியை கடத்திச் சென்றுள்ளார் எனவும் சிறுமியின் பெற்றோர் ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முன்னதாக புகாரளித்தனர்.

புழல் சிறையில் அடைப்பு

இந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் காசிமேடு ஜீவரத்தினம் நகர் 3ஆவது தெருவைச் சேர்ந்த சுபாஷ் (20), அவருடைய தாய் வசந்தி (46) ஆகியோரை காவல் நிலையம் அழைத்துவந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், சிறுமியிடம் சுபாஷ் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, திருமணம் செய்துகொள்வதாகக் கூறியதை அடுத்து, அதனை நம்பி சிறுமியை கடந்த மூன்று நாள்களுக்கு முன் சுபாஷ் உடன் அருகிலுள்ள கோயிலில் அவரின் தாய் வசந்தி திருமணம் செய்துவைத்தது தெரிய வந்தது.

இளைஞர் சுபாஷ்
இளைஞர் சுபாஷ்

மேலும் சுபாஷ், சிறுமியைக் கட்டாயப்படுத்தி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுதொடர்பாக ராயபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தில் சுபாஷை கைதுசெய்து மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: 'குறைந்த மதிப்பெண்களைச் சுட்டிக்காட்டி கேலி - மாணவி தற்கொலை'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.