ETV Bharat / crime

பப்ஜி மதனின் இன்ஸ்டாகிராம் மூலம் காவல் துறையினர் எச்சரிக்கை! - காவல்துறையினர் எச்சரிக்கை

பப்ஜி மதனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம், அதனை பின்தொடர்பவர்களுக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் துறையினர் எச்சரிக்கைப் பதிவை விடுத்துள்ளனர்.

பப்ஜி மதன் இன்ஸ்டாகிராம்
பப்ஜி மதன் இன்ஸ்டாகிராம்
author img

By

Published : Jun 23, 2021, 6:49 AM IST

சென்னை: மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் துறையினர் மதனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எச்சரிக்கைப் பதிவு ஒன்றை வெளியிட்டு, ஸ்டேட்டஸ் வைத்துள்ளனர்.

பப்ஜி மதன் ஐடியில் காவல் துறை வெளியிட்ட அறிவிப்பு

காவல் துறை வெளியிட்டுள்ள அந்தப் பதிவில், "மதனுடன் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பில் இருக்கும் எல்லோருடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம். 'பப்ஜி' விளையாட்டு இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆபாச வார்த்தைகளைப் பேசி சமூக வலைதளத்தில் பரப்பி வருபவர்களைக் கண்காணித்து வருகிறோம்.

எல்லோருடைய குறுஞ்செய்திகளையும் படித்து வருகிறோம். தடை செய்யப்பட்ட பப்ஜியை விளையாடுபவர்களைக் கண்டறிந்து அவர்களது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்க உள்ளோம்.

தடையை மீறி விளையாடுபவர்களின் வீட்டு முகவரிக்கு கடிதம் அனுப்ப உள்ளோம்.

எல்லோரையும் கண்காணித்து வருகிறோம், கவனமாக இருங்கள். மதன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்'' எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த 7 நாட்களுக்கு அனுமதியில்லை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.