ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள கோட்டைமேடு சுபாஷ் நகரைச் சேர்ந்தவர் கோகுல் (28). அவர் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.
அத்துடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் உறவினர்கள், கமுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் காவலர்கள் கோகுலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞருக்கு 20ஆண்டுகள் சிறை!