தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உள்பட்ட செட்டிதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (30).
பெயிண்டர் ஆக வேலை பார்த்து வரும் இவருக்கும் வாழைகொல்லை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று (ஆக.30) இரவு ஏழு முப்பது மணி அளவில் பெயிண்டர் சுரேஷ் அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு சாக்குப்பையில் ஆடு வெட்டும் அரிவாளை மறைத்து வைத்திருந்த வாழைகொல்லை சுரேஷ், பெயிண்டர் சுரேஷின் கழுத்துப்பகுதியில் திடீரென எதிர்பாராத விதமாக வெட்டினார். இதனால் பெயிண்டர் சுரேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை டிஎஸ்பி செங்கமல கண்ணன் மற்றும் அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளர் அண்ணாதுரை ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பெயிண்டர் சுரேஷின் உடலை கைப்பற்றி அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி கொலையாளியை தேடி வருகின்றனர். முக்கிய கடைவீதியானா வண்டிப்பேட்டை பகுதியில் இந்த சம்பவம் நடந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: வடமாநிலத்தவர்கள் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு - இருவர் கைது