ETV Bharat / crime

குளிர்பானத்தில் மயக்க மருந்து; ரயில் பயணிகளிடம் கைவரிசை - இளைஞர் கைது - சென்ட்ரல் ரயில் நிலையம்

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து பயணிகளிடம் கைவரிசை காட்டிய வடமாநில இளைஞர் 150 மயக்க மாத்திரைகளுடன் கைதுசெய்யப்பட்டார்.

North Indian train thief arrested
North Indian train thief arrested
author img

By

Published : Dec 24, 2021, 10:02 AM IST

Updated : Dec 24, 2021, 10:26 AM IST

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து டிசம்பர் 21ஆம் தேதி மாலை டெல்லி செல்லும் விரைவு ரயிலில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நீதேஷ்குமார் யோகி (19), அவரது சகோதரர் லோகேஷ் குமார் யோகி (22) ஆகியோர் பயணம்செய்தனர். அவர்கள் இருந்த டி2 பெட்டியில் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவரும் இருந்துள்ளார்.

ரயில் கிளம்பியதும் அந்த நபர் நீதேஷ்குமார், லோகேஷ் குமாரிடம் பேச்சு கொடுத்துள்ளார். வெகுநேரமாக மூன்று பேரும் ரயிலில் பேசிக்கொண்டே வந்தனர். இந்நிலையில், இந்த ரயில் கூடூர் - நெல்லூர் இடையே சென்று கொண்டிருந்தபோது அந்த நபர் கொடுத்த குளிர்பானத்தை இருவரும் வாங்கிக் குடித்துள்ளனர். குளிர்பானத்தை குடித்த சிறிது நேரத்தில் இருவரும் மயங்கி விழுந்துள்ளனர்.

நாக்பூரில் கண்விழித்த இளைஞர்கள்

ரயில் நாக்பூர் அருகே வரும்போது, இருவரும் கண்விழித்துப் பார்த்தனர். அப்போதுதான் அந்த நபர் தங்களுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து தங்களது பணம், செல்போன் ஆகியவற்றைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து, நாக்பூர் ரயில்வே காவலர்களிடம் இருவரும் புகார் அளித்தனர். நாக்பூர் ரயில்வே காவலர்கள், சென்னை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்புப் படை காவலர்கள் உதவியுடன் விசாரணை நடத்தினர்.

North Indian train thief arrested
திருடன் அப்துல் ரகுமான்

சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் ரோகித்குமார் தலைமையில், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட காவலர்கள், கண்காணிப்புக் கேமராக்கள் உதவியுடன் குற்றவாளியைத் தேடினர்.

சென்ட்ரல் நிலையத்தில் கைது

இந்நிலையில், திருட்டில் ஈடுபட்ட நபர் நேற்று முன்தினம் (டிசம்பர் 22) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் டெல்லி செல்லும் ஜி.டி. விரைவு ரயிலில் ஏறி உட்கார்ந்திருந்தார். இதைக்கண்ட, காவலர்கள் அவரை உடனடியாகக் கைதுசெய்து விசாரித்தனர்.

North Indian train thief arrested
நீதேஷ்குமாரின் உடமைகள் ஒப்படைப்பு

விசாரணையில் அவர் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் பகுதியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் (28) என்பது தெரியவந்தது. மேலும், அவரிடமிருந்த ஏழு செல்போன்கள், நான்காயிரம் ரூபாய், 150 மயக்க மாத்திரைகள் முதலியவற்றைப் பறிமுதல்செய்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும், நீதேஷ்குமாரிடமிருந்து திருடப்பட்ட பொருள்களையும், பணத்தையும் மீட்டு அவர்களிடம் காவல் துறையினர் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: கள்ளத்தனமாக பதுக்கி வைத்திருந்த சிலிண்டர்கள் பறிமுதல்

Last Updated : Dec 24, 2021, 10:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.