நீலகிரி: கூடலூர் பகுதிக்கு கேரளா மாநிலம் எர்ணகுளம் பகுதியிலிருந்து ஒன்பது நபர்கள் உதகைக்கு சுற்றுலாவிற்காக வந்துள்ளனர். இவர்கள் தொரப்பள்ளியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியுள்ளனர். தங்கும் விடுதி அருகில் உள்ள ஆற்றில் மூன்று பேர் குளிக்கச் சென்றுள்ளனர்.
குளிக்கச் சென்ற மூவரில் ஒருவர் நீரில் மூழ்கியதாகத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கிடைத்த நிலையில், அப்பகுதிக்கு விரைந்துசென்ற தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கிய நபரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நீரில் மூழ்கிய நபர் தற்போது சடலமாக மீட்கப்பட்டார். இவர் பெயர் வினோத் (45) என்பது தெரியவந்துள்ளது. இவரது உடலை கூடலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காகக் கொண்டுசெல்ல காவல் துறையினர் அனுப்பிவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: 1000 வீடுகளுக்குள் புகுந்த கழிவு நீர்!