ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுஷ்மா. இவர் தனியார் அலுவலகத்தில் பொறியாளராகப் பணியாற்றி வந்துள்ளார். இப்பெண்ணுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு, புர்தலப்பட்டு பகுதியைச் சேர்ந்த நபருடன் திருமணம் நடந்துள்ளது. பெண்ணின் உறவினர்கள் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தியதனால், சுஷ்மா திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. சுஷ்மாவுக்கு இந்த திருமணத்தில் சற்றுகூட விருப்பமில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் சுஷ்மாவின் சகோதரன், மாவட்ட காவல் நிலையத்திற்குப் போன் செய்து, தனது சகோதரி சுஷ்மா தற்கொலை செய்து கொண்டதாகவும் அதனை முறைப்படி விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இதுகுறித்த விசாரணையில், இந்த திருமணத்தில் விருப்பமில்லாத சுஷ்மா மனமுடைந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டதாகவும்; இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருவதாகவும் தெரிகிறது.
இதனையும் படிங்க: சட்டப்பேரவை தேர்தல் 2021; மார்ச் 8ஆம் தேதி அமமுக நேர்காணல்!