புதுச்சேரி மாநிலம் நோணாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. கணவரை இழந்த இவர், தனது இரு மகள்கள், மகனுடன் வசித்துவந்தார். இவருக்கு இடையார்பாளையம் பகுதியில் இரண்டு ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது. இதனை அபகரிக்க உறவினர்கள் முயல்வதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாகவும் தெரிகிறது.
இந்நிலையில் இன்று காலை, கடலூர்-புதுவை எல்லையான இடையார்பாளையம் பகுதியில் விஜயலட்சுமியும், மகள் மாதங்கி என்கிற சந்தியாவும் கொலைசெய்யப்பட்டு அவர்களது நிலத்திலேயே உடல் பாகங்களைத் தனித்தனியாக வெட்டி வீசியுள்ளனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற புதுச்சேரி காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தாய், மகள் இருவரும் நிலத்தகராறு காரணமாக உறவினர்களால் கொல்லப்பட்டார்களா என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
சம்பவ இடத்தில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் நேரில் சென்று ஆய்வுமேற்கொண்டார்.
இதையும் படிங்க: பெருந்துறையில் கிடந்தது திருப்பூரில் திருடப்பட்ட ஏடிஎம் இயந்திரமா?