கோவை: கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த 19ஆம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இதில் படுகாயம் அடைந்த இரு நபர்களில் ஒருவரான ஷாரிக் என்பவர் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தியது தெரியவந்தது. அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் தமிழகத்தின் சில பகுதிகளுக்கும் கேரளாவிற்கும் சென்று வந்தது தெரிய வந்தது.
மேலும் போலியான ஆதார் எண்கள் மற்றும் போலியான பெயர்களில் அவர் விடுதிகளில் தங்குவதும், whatsapp எண்களை பயன்படுத்துவதுமாக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் அவர் பயன்படுத்திய செல்போன் எண்ணின் பெயரை பிரேம் ராஜ் என்ற பெயரில் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. கௌரி அருண்குமார் என்ற பெயரில் கோவை விடுதியில் தங்கி இருந்ததும் தெரிய வந்துள்ளது.
இதனிடையே ஷாரிக் பயன்படுத்திய whatsapp எண்ணில் கோவையின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான ஈஷாவின் ஆதியோகி சிலையை DP ஆக வைத்திருந்ததாக புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அந்த whatsapp எண் கடந்த 18 ஆம் தேதி வரை செயல்பட்டு இருந்ததும் தெரிய வந்ததுள்ளது.
இந்த நிலையில் ஷாரிக் கோவை வந்தபோது ஈஷா சென்று வந்தாரா? அவருடன் வேறு யாரும் அங்கு சென்று வந்தனரா? அல்லது தனது அடையாளத்தை மறைக்க வாட்ஸ் ஆப்-ல் முகப்பு படமாக வைத்துள்ளாரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: பைக் சாகசம்- சாலையில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு...