ETV Bharat / crime

சிறைக்கைதிகளுக்கு போதைப் பொருள்கள் விநியோகம் - காவலர்கள் பணியிடை நீக்கம் - சிறைத் துறை காவலர்கள் பணிநீக்கம்

மதுரை மத்திய சிறையில் சிறைக்கைதிகளுக்கு செல்போன், தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் வழங்கி, உதவிவந்த இரண்டு சிறைத் துறை காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

சிறைக்கைதிகளுக்கு போதைப் பொருள்கள் விநியோகம் - காவலர்கள் பணியிடை நீக்கம்

author img

By

Published : Mar 24, 2022, 8:35 PM IST

மதுரை: விஜய், விஜய் சேதுபதி நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தில் சிறைக்கைதிகளுக்கு போதைப்பொருள்கள் செல்வது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.அதுபோலவே, ஒரு நிஜ சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதுரை மத்திய சிறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனைக் கைதிகள் உள்ளனர்.

இந்நிலையில் சிறைக்கைதிகள் சிலருக்குத் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதைப்பொருள்கள் விநியோகம் செய்யப்படுவதாகப் புகார் எழுந்தது. இதனையடுத்து சிறை வளாகம் முழுவதிலும் சிறைத்துறை காவல் துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.

நீங்களே(சிறைத் துறை காவலர்கள்) இப்படி செய்யலாமா..!

இதில், மதுரை மத்திய சிறையில் உள்ள விசாரணை மற்றும் தண்டனைக் கைதிகள் ஏழு பேருக்கு செல்போன் மற்றும் கஞ்சா ஆகியவற்றை வழங்கி உதவியதாக எழுந்தப்புகாரில், சிறைத்துறை காவலர்களான விஷ்ணுகுமார், செந்தில்குமார் ஆகிய இருவரை கடந்த சில நாள்களுக்கு முன்னர் பணியிடை நீக்கம் செய்தனர்.

இதனையடுத்து சிறைத்துறை நிர்வாகத்தின் சார்பில் குழு அமைத்து பணிநீக்கம் செய்யப்பட்ட காவலர்கள் மற்றும் சிறைவாசிகளிடம் விசாரணை நடத்தினர். அதில் சிறைக்கைதிகளுக்கு ஐந்து மாதங்களாக செல்போனை சட்டவிரோதமாக வழங்கி 113 முறை பேச வைத்துள்ளதும், தடை செய்யப்பட்ட கஞ்சா, சிகரெட், குட்கா போன்ற போதைப்பொருள்களை வழங்கியுள்ளதும் தெரியவந்தது.

விசாரணைக்குப்பின் சிறைக்காவலர்களான விஷ்ணுகுமார், செந்தில்குமார் ஆகிய இருவரையும் பணியிடைநீக்கம் செய்த உத்தரவை நீட்டித்து, மதுரை சிறைத்துறை நிர்வாகம் ஆணைப் பிறப்பித்தது. இதையடுத்து சிறையில் தொடர் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

மதுரை சிறையில் சிறைவாசிகளுக்கு காவலர்களே சட்டவிரோதமாக உதவியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 'உயிர் காப்பான் போலீஸ்.. ரயில் முன்பாய்ந்த இளைஞரை காப்பாற்றிய காவலர்!'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.