கோயம்புத்தூர்: கேரளா மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் ரெஜிஸ் (47). இவர் கோயம்புத்தூர் சேரன்மாநகர் பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் ஒரு கோடியே 32 லட்சம் ரூபாய்க்கு நகைகளை அடைமானம் வைத்து பணம் பெற்றுள்ளார்.
இந்நிலையில் அவர் கொடுத்த நகைகள் போலியானவை எனப் பின்னர் தெரியவந்துள்ளது. இது குறித்து அடைமான பிரிவிலுள்ள வங்கி ஊழியர்கள் தங்கள் மீது தவறு இருப்பது என்பதை உணர்ந்து தலைமறைவாகினர்.
இதைத் தொடர்ந்து போலி நகை கொடுத்து மோசடியில் ஈடுபட்ட ரெஜிஸை மாநகர குற்றப்பிரிவு காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் நேற்று (ஜனவரி 30) அவரை கைதுசெய்துள்ளனர்.
மேலும், வங்கி தங்க நகை மதிப்பீட்டாளர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. பின்னர் காவல் துறையினர் நேற்று கோயம்புத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ரெஜிஸை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் ரெஜிஸ் மீது கேரளாவில் பல்வேறு மோசடி குற்ற வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையும் படிங்க: தேர்தலுக்கும் கரோனா பரவலுக்கும் சம்பந்தம் கிடையாது - ஜெ. ராதாகிருஷ்ணன்