ETV Bharat / crime

காதலியை கொலை செய்த செய்தியாளர்... உடலை மறைக்க சென்றபோது சிக்கினார் - மகாராஷ்டிரா செய்திகள்

மகாராஷ்டிரா அருகே தன்னுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறப்படும் பெண்ணை கொலை செய்த செய்தியாளர், உடலை மறைக்க சென்றபோது போலீசாரிடம் பிடிபட்டார்.

காதலியை கொலை செய்த செய்தியாளர்
காதலியை கொலை செய்த செய்தியாளர்
author img

By

Published : Aug 19, 2022, 11:38 AM IST

மும்பை: மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் சௌரப் லக்கே (35). பத்திரிகை செய்தியாளராக பணிபுரிந்த இவர், 24 வயதான பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

சௌரப் லக்கே அந்த பெண்ணை கடந்த ஆக.15 ஆம் தேதி வீட்டில் கழுத்தை நெறித்து கொலை செய்து, அவரின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்தும்போது, வீட்டு உரிமையாளர் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் அவரை நேற்று முன்தினம் (ஆக. 18) கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ஒப்பந்த அடிப்படையில் செய்தியாளராக பணியாற்றும் சௌரப் லக்கே, கொலை செய்யப்பட்ட பெண்ணுடன் மீறிய உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண், சமீபத்தில் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து, ஹட்கோ பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளது என்றும் அங்கு சௌரப் அடிக்கடி வந்து சென்றதாகவும் கூறப்படுகிறது என போலீசார் தெரிவிக்கின்றனர்.

மேலும், தன்னை திருமணம் செய்துகொள்ள கூறி அந்த பெண், அவரை வற்புறுத்தியதால், கடந்த ஆக. 15ஆம் தேதி கழுத்தை நெறித்து கொலை செய்து, பாகங்களை துண்டு துண்டாக வெட்டியுள்ளார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நாள் (ஆக. 16) பெண்ணின் தலையையும், கைகளையும் ஷியூர் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் பதுக்கி வைத்துள்ளார்.

மேலும், அவருடைய மீதமுள்ள பாகங்களை வீட்டில் இருந்து எடுத்துச்செல்ல முயன்றபோது, அந்த வீட்டின் உரிமையாளருக்கு இவரின் நடவடிக்கையில் சந்தேகம் வந்தது. வீட்டின் உரிமையாளர் கொடுத்த தகவலின்பேரில் அங்கு வந்த போலீசார், லக்கேவை ஷியூர் செல்லும் வழியில் மடக்கி பிடித்ததாக தெரிவிக்கப்பட்டது. தற்போது, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கொலை செய்யப்பட்ட பெண் அவுரங்காபாத் மாவட்டத்தின் ஷியூர் பகுதியில் மூன்று வயது குழந்தைக்கு தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: போலீசிடம் தப்பித்த குற்றவாளியை அடித்தே கொன்ற பொதுமக்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.